logo top
tamlogo ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
  ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க
   இந்த இணைய தளம் பராமரிப்பு:  ஜி.கே.கௌசிக்

the intention of this site is to propagate the glory of Lord Anjaneya.  visitors to this site are welcome to contribute article in praise of the lord, details about the ancient Anjaneya temples in tamil.  original work of the author in the form of article, details and photographs of temple and deity etc.,  may kindly be e-mailed to  vayusutha@yahoo.co.in and must carry full postal address.



ஸ்லோகங்கள்

துதிகள்

ஸ்துதிகள்

கட்டுரைகள்

கோவில்கள்

பலகை

ஆங்கில இணை தளம்

வெளியீடு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாதம் தோறும் விரிவடையும் வலை

சமீபத்திய சேர்க்கை : விவரம்

வாயு சுத:    வாயு பகவானின் புதல்வர்
ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.


ஆஞ்சநேயர், சஞ்சீவி ராயன், ஹனுமந்தன் என்று பல பெயர்களில் பிரபலமான, இராமயண கதாபாத்திரம் இவர். இராமயண கதாநாயகன் இராமனின் செயலில் குறை கண்டவர் உள்ளனர். இராமயணத்தில் குறையில்லா குணமுடையவராக ஆஞ்சநேயரின் கதாபாத்திரத்தை சித்தரித்தவர் வால்மீகி. அதுவும் அவரை குரங்கின் உருவமாக்கி சுந்தரனாக்கியுள்ளார். குரங்கினையும் சுந்தரமாக்கிக் குணத்தின் பேருருவாய்ச் செய்து, அறிவில் பெருங்கடலாய்ச் செய்து, பக்தியின் ப்ரவாகமாய் செய்து அந்த கதாபாத்திரத்திற்குத் தெய்வத்துவம் கொடுத்த வால்மீகியின் கருணை பெரிது. அப்படிப்பட்ட ஸ்ரீஆஞ்சநேய மஹாப்ரபுவின் குணப்ரவாகங்களை பலர் தங்கள் தங்கள் மொழிகளில் கீர்த்தனங்களாகச் செய்துள்ளனர். (கீர்த்தனங்கள் என்பது கீர்த்தியை சொல்லும் பாடல்கள்). முடிந்த வரை அவைகளை தொகுத்து இவ்விணைய தளத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.

ஸம்ஸ்கிருத மொழியில் உள்ளவைகளை 'ஸ்லோகங்கள்' என்ற தலைப்பிலும்

தமிழ் மொழியில் உள்ளவைகளை 'துதிகள்' என்ற தலைப்பிலும்

இதர மொழிகளில் உள்ளவைகளை 'ஸ்துதிகள்' என்ற தலைப்பிலும் தொகுத்துள்ளோம்.

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, வாக்குவன்மையை, உறுதிப்பாட்டை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை  'கட்டுரைகள்' என்ற தலைப்பில் தொகுத்துள்ளோம்.

 


வாயுசுத: ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியைப் பற்றிய ஏடுகள்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளுக்கு அர்ப்பணம்
வீமனும்அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.

                                                                                           -மகாகவி பாரதி

ஒரு காலகட்டத்தில் பக்தி மார்க்கம் - பகவானை துதிப்பதின் மூலமே அவனின் திருவருளை பெறமுடியும் என்ற நம்பிக்கை பெருகியது. பிரதேச மொழிகளில் பகவானின் கீர்த்திகளை பல மகான்கள் பாடினார்கள். ஞான தேவர், துகாராம், ஏகநாதர், நாமதேவர் தெற்கில் வியாஸராஜா, புரந்தரதாஸர், கனகதாஸர் முதலியவர்கள் தங்கள் பக்திப்பாடல்களால் மக்களை கவர்ந்தனர். மக்கள் பக்தி மார்க்கம் - பாகவத தர்மம் என்றும் கூறுவர் - நடைமுறையில் கடைப்பிடித்தனர்.

இப்படி பக்தி மார்க்கத்தில் திளைத்த மக்களுக்கு, வடக்கில் ஸ்ரீ துளஸிதாஸர், மேற்க்கில் ஸமர்த்த ஸ்ரீ ராமதாஸர், தென்மேற்க்கிலும் தெற்கிலும் ஸ்ரீ வியாஸராஜா இவர்களின் செல்வாக்கினால், ஸ்ரீ ஆஞ்சநோயர் மீது பக்தி அதிகமாயிற்று. பண்டை காலம் முதல் ஸ்ரீ ஆஞ்சநோய ஸ்வாமிக்கு என்றே பல தனி கோயில்கள் இருந்து வருகிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு தைரியமும் விழிப்புணர்ச்சியும் ஊட்ட ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டினை இவர்களின் காலகட்டத்தில் பெருகினார்கள். பக்தி மார்க்கம் நிலைத்துவிட்ட இக்கட்டத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு என்றே பல கோயில்கள் கட்டப்பட்டன. இன்றும் பல தனி கோயில்கள் கட்டப்படுகின்றன.

இக்கோவில்களின் விவரங்கள் பற்றி 'கோவில்கள்' பகுதியில்.

உங்கள் ஊர் கோவில்களில் நடக்கும் விழாக்களின் விவரம் 'பலகை' பகுதியில்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் பற்றிய எங்கள் ஆங்கில இணைய தளம் பற்றிய விவரங்கள் 'ஆங்கில இணை தளம்' பகுதியில்.

புத்தகங்கள் பதிப்பு பற்றிய விவரங்கள் 'வெளியீடு' பகுதியில்

ஆதரவும் தகவலும் தாங்கள் தாருங்கள்.
இந்த இணைய தளம் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழை பரப்ப வாருங்கள்..

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

வருகை பதிவேடு பதிக்க

வருகை பதிவேடு படிக்க

தாங்கள் வருகைக்கு நன்றி.
தாங்கள் 27.08.2000 ல் இருந்து 
Counter ம் வருகையாளர்.


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்

நம்பினோம் நாவரசை நாங்களே

you are with vhayusudha: home page at
http://oocities.com/vhayusudha
mail in your suggestion to vayusutha@yahoo.co.in


though the intention of this site is to propagate the glory of Lord Anjaneya, kindly note that no material appearing in these pages could be reproduced in any manner without explicit permission from us.
to get permission for using the materials appearing in this web page
contact  vayusutha@yahoo.co.in